என் மனசாட்சியிடம் திருடியது

என் பெயர். "பிரகாஷ்". படித்தது "திருநெல்வேலி" யில்..வேலை "சிங்கார சென்னை" யில்.... தற்சமயம் "Tokyo" வில். "என்னை சுற்றி .. நம்மை சுற்றி.. நடந்தவை, நடப்பவை பற்றிய அலசல் .. இந்த வலைப்பதிவு...

Wednesday, February 23, 2005

HighTech-Puspak

"We will be landing in another 10 minutes" என்ற Indian Airlines அறிவிப்பு மகிழ்ச்சியை தந்தது. "Puspak" ஐ பார்க்க போகிறேன் என்னும் எண்ணத்தில் சந்தோஷம் பீறிட்டு வந்தது.."2 minutes Maggi" செய்யும் நேரத்தில் Immigration check, Security Check, baggage clearance எல்லாம் முடிந்து இருந்தது. "பெரிய முன்னேற்றம் தான்" என்று எண்ணிகொண்டென்....எங்கு பார்த்தாலும் Cellphone, Laptop, Security எல்லாமே ஒரு High Tech ஆக காட்சி அளித்தது. Airport ஐ விட்டு வெளியே வந்து "Puspak" கண்ணில் தட்டு படுகிறதா என்று மேலே பார்த்தேன்.. அப்பொழுது ஒரு குரல்.

"என்ன பா மேல பாக்கற.?? " என்னை Receive செய்யவந்த அப்பா. " வேற என்ன பா ? Puspak" தான். உலகத்துலேயே Cheap and Best High Technologyல "புஷ்பக்" நம்ம இந்தியா ல பறக்கறது ரொம்ப பெருமையா இருக்கு பா" என்றேன்.. தன்னுடைய அதே பழைய Sentiment "Lancer " ஐ மறுபடியும் கொண்டு வந்து இருந்தார்.. "கொடுத்து விட்ட சாம்பார் பொடி எல்லம் இருக்கா, தீர்ந்து போச்சா ?.. என்ன டா இளைச்சு போய்ட்ட, வேல ஜாஸ்தியா?" அம்மா கேள்விகளை அடுக்கி கொண்டே போனாள் பதிலுக்கு காத்திராமல்.

"Road க்கு மேல AIR ல 2 Layers. அதுல First Layer ல 200KM Speed, இரண்டாவது Layer ல 300 KM Speed ல தான் Pushpak போகும் அதான் Rule." என்று அப்பா சொல்ல "உம். Net la படிச்சேன், வரும் போது flightல கூட Documentry பார்த்தேன் பா". என்று தலை ஆட்டி விட்டு மறுபடியும் மேலே பார்க்க ஆரம்பித்தேன்.
அதோ , அதோ. ஒன்றை பார்த்துவிட்டேன். சிறிய , அழகான "HighTech-Pushpak". "அப்பா, அதோ, அங்க பாரு அங்க பாரு" என்றேன் சிறு குழந்தையை போல் கையை தூக்கி காட்டியபடி. "Tata and Reliance, private Puspaks வைச்சு இருக்காங்க. ஆனா Majority Government Pusupak தான் டா" என்றார் அப்பா.

Car இல் வீடு வந்து சேரும் வரை வழி எல்லாம் ROAD க்கு மேல் பறந்து கொன்டு இருந்த "Pushpak" ஐ விரல் விட்டு எண்ணீ கொண்டே வந்தேன். KK நகர் லில் Car
நுழைகிறது, ஆச்சரியம் "RTO" விற்க்கு அடுத்து இருந்த காசி குப்பத்தை காணவில்லை.. "அப்பா, குப்பம் என்ன மறுபடியும் தீ ல எறிஞ்து போச்சா ??" என்றேன் வேதனையாக.."இல்ல பா, New Chennai" வந்ததுல இருந்து நிறைய Change டா" என்றார்.. "சும்மாவா Governemnt ஒரு புது ஊரே இல்ல கட்டி இருக்கு!!" என்றாள் அம்மா. "இன்னும் 2 நிமிடத்தில் குறிப்பிட்ட முகவரியை சென்று அடைவோம்.." Car இன் GPS தமிழில் அறிவித்தது.. கதை எல்லாம் பேசிக்கொண்டே அம்மா கையால் சமைத்த வெங்காயசாம்பாரையும், வெண்டைக்காய் பொறியலையும் ஒரு பிடி பிடித்தேன். அடுத்த நாள் "Pushpak" இல் Office போகும் எண்ணத்தை அப்பாவிடம் கூறிவிட்டு "Pushpak" கனவோடு உறங்கிப்போனேன்..

"கொசல்யா, சுப்ரஜா, ராமபூர்வா.." சுப்ரபாதம் என்னை எழுப்பி விட்டது.. "அம்மா, தண்ணி Problem எப்படி இருக்கு அம்மா ??" என்றேன் Silver Tumbler லில் "Filter
Coffer" யை உறிஞ்சியபடி.. "கூவம் சுத்தம்" பண்ணதுக்கு அப்பறம் ஒரு Problem உம் இல்ல டா. போறாத குறைக்கு "கடல் தண்ணி வேற சுத்திகரிச்சு Tape லயே
வருதா..தாராளமா செலவழிக்கலாம்.. ".னு பேசிக்கொண்டே Whistle செய்த Cooker இன் மண்டையில் ஒரு குட்டு குட்டினாள்... "நான் உனக்கு Net a "Puspak" Book
பண்ணிட்டேன் 8:48 க்கு நம்ம மொட்ட மாடி லேயே வரும் Be Ready" என்றார் அப்பா.. "தமிழ்ல இருக்கறதுனால ரொம்ப வசதி பா.. நான் கூட Book பண்ணுவேன் தெரியுமா?..." என்றாள் அம்மா பெருமையாக.. நெழிந்து போனேன்....இது அல்லவா அனைவரின் கனவும். பெருமூச்சு விட்டுகொண்டு சாதித்த அனைவருக்காகவும், நான் பெருமை பட்டு கொண்டேன்..

மொட்டை மாடியில் காத்து இருந்தேன் "என் Pushpak " இன் வருகைக்காக.. சரியாக 8:48.. மேலே பார்க்கிறேன், எனக்காக ஒரு வெள்ளை நிற சிறிய Pushpak "கட்டபட்ட எலுமிச்சம்பழத்தோடு இறங்கியது..". Automatic கதவு திறந்தது. "வணக்கம் Sir, ". என்றான் Pilot. Name Plate ல் "முனிசாமி" பளிச்சிட்டது. மெல்லிசாக Latest யுவன் சங்கர் ராஜா வின் Music Album ஓடிக்கொண்டு இருந்தது. Pilot க்கு தேவையான Controls ஐ தவிர, அங்கு ஒரு GPS, ஒரு MusicSystems , குட்டி Laptop , ஒரு சாமியார் Photo ( யாருன்னு தெரியல. ) உம் இருந்தது.. பின்னர் திருவள்ளுவர் பக்கத்தில் ஒரு குறளும், 1+1 உம் கூட எழுதி இருந்தது. "Seat Belt ஐ போட்டுங்க Sir " என்றான்.

"Pushpak" தன் இறக்ககையை ( Fan) சுத்திவிட்டு பறக்க ஆரம்பித்தது.. "உம், எத்தன மாசமா Pilot ??." என்றேன் முனிசாமியிடம்.. "6 மாசம் ஆச்சு Sir , எங்க பரம்பரை முன்னாடி ஆட்டோ தான் ஓட்டிக்கிட்டு இருந்தது. இது Government வேலை அதான், இங்க வந்துட்டேன்,Sir.. " என்றான். என்னுடைய பார்வை அந்த கதவிற்க்கு பக்கம் இருந்த பொருள் மீது தாவியது..அங்கே..ஒரு சிறிய அழகான Digitial Meter. ."Meter, சூடு வைத்ததா ? வைக்காதாதா ? "என்றேன் கிண்டலாய்.. "Sir, Digital Meter Sir ..ஒழுங்கா ஓடும் Sir." என்றான் சிறிய புன்னகையோடு..

"KK நகர் ல இருந்து TNagar வரை 879Rs, 3 Minutes அப்பா சொன்னது நினைவு வந்தது. " 879" மறுபடியும் சொல்லி கொண்டேன்.. சரியாக 3 நிமிடத்தில் இல்
இறங்கியது Company இன் மொட்டை மாடியில்.. Meter ஐ பார்க்கிறேன்.. 1000 Rs என்று காட்டியது.... பலத்த யோசனைக்கு பிறகு "சரி போட்டும்" , என்று 1000 ஐ
நீட்டிநேன்". முனிசாமியிடம்...

"Sir.....என்ன Sir கரீட்டா 1000 குடுக்கறீங்க, கொஞ்சம் Meter க்கு மேல போட்டு தாங்க Sir".. என்றான் தலையை சொறிந்து கொண்டே...

Monday, February 21, 2005

"Black" - திரைவிமர்சனம்.

Sanjay Leela Banshali ( Hum Dilke Chuke Sanam, Devdas ) HINDI சினிமாவில் எடுத்து இருக்கும் அசாத்தியமான முயற்சி. கல்நெஞ்சகாரர்களையும் கரைய வைக்கும் இந்த காவியம். சுகம், துக்கம், இயலாமை, ஆற்றாமை இப்படி நிறைய உணர்ச்சிகளில் நம்மை அறியாமலும் பொங்கி வரும் கண்ணீரை கட்டுபடுத்தமுடியவில்லை.


Michelle McNally ( Aayesha Kappor/ Rani Mukerjee ) பார்க்க முடியாத, காதும் கேக்க முடியாதவள். இவளை உலகுத்துடன் பேச வைத்து வாழ்க்கையில் வெற்றி பெற வைக்கிறார் Special Teacher Amitabh. கடைசியில் Teacher க்கே Teacher ஆகி மனதை நெகிழ வைக்கிறாள் Rani.

முதல் பாதியில 8 வயது Michelle ஆக வரும் "Aayesha Kapoor" னின் நடிப்பு நம்மை கட்டி போட வைக்கிறது. முதல் காட்சியிலேயே நம்மை அதிற வைக்கிறாள். இவளூக்கு முதல் படமாம், சொன்னாலும் நம்பமுடியவில்லை.. Child Actress award 2005 உனக்கு தான் Aeyeshaa..சந்தேகமே இல்லை.

கொஞ்சம் யோசித்து பார்க்கிறேன்..பார்க்கவும் முடியாமல், கேக்கவும் முடியாமல் வாழ்க்கையில் வெற்றி பெறுவது சாத்தியமா ? சாதித்து காட்டீருக்கிறாள் ராணி. ராணி முகர்ஜி நடிப்பிற்கு தீனி போட்ட படம் இது. உணர்ச்சிகளை காட்டுவதற்கு "கண்" அல்லது "பேச்சு" வேண்டும். இவை இரண்டும் இல்லாமல் ராணி சிரிக்க எண்ணும் போது நாம் சிரிக்கிறோம், அவள் அழ நினைக்கும்போது நாம் அழுகிறோம். ராணி நீ நடிப்பிலும் ராணி தான்.

"Big B" Amitabh இவர் இல்லாத Frame இல்லை என்று சொல்லலாம். மனிதர் புரட்டிஎடுத்துஇருக்கிறார். "நான் இப்ப எப்படி திரும்பி போவது ? " என்று கேட்கும் காட்சியிலும் "yes..ofcourse The Princial" காட்சியிலும் தனக்கு வந்திருக்கும் நோய் அவருக்கு தெரியாமல் நமக்கு முதலில் தெரியபடுத்தி விடுவது "Class".

Sanjay இன் ஒரு ஒரு Frame உம் செதுக்கபட்டவை. "Script" , "ScreenPlay" இல் கவனமாக கையாண்டு இருக்கிறார். அந்த "Sensitive" ஆன விஷயத்தை காமம் சிறுதும் கலக்காமல் கண்களில் கண்ணீரோடு அந்த காட்சியில், இதயதுடிப்பை இரண்டு நிமிடங்கள் நிறுத்திவைக்கிறார். வேறு விதமாகவும் காட்டீருக்கலாமோ ? Sanjay இந்த படம் 2'30 மணி நேரம் ஓடுவது தேவைதானா ? கொஞ்சம் வெட்டீருக்கலாமோ ? உம். புரிகிறது. எல்லா காட்சிகளுமே உணர்ச்சிகளின் வெளிப்பாடாய் தானே இருக்கிறது. எதைதான் வெட்டுவது ?

"Ravi.K.Chandran" ( கன்னத்தில் முத்தமிட்டால், ஆயுத எழுத்து ) தான் இதில் camera வை கையாண்டுஇருக்கிறார். "Blind" என்பதாலோ என்னவோ Michelle வெளிச்சத்துக்கு வரும்வரை, நம்மையும் இருட்டிலேயே படம் காட்டீருக்கிறார். இயற்கை இல்லாமல் வெறும் மனிதர்களின் உணர்ச்சிகளை மட்டும் படம் பிடித்து காட்டிய இவருக்கு ஒரு சவாலாக இருந்துஇருக்கும் என்பதில் மாற்றுக்கருத்தே இல்லை எனலாம்.

"Holloywood" இன் "Miracle Worker" ( 1962 ) தான் "மூலம்" என்கிறது சில வலைப்பதிவுகள். இருந்தாலும் Aayeshaa / Rani Mukerjee / Amitaabh / Sanjay இவர்களின் கடினமான உழைப்பு "Miracle Worker" யை போலவே "Award" களை அள்ளித்த்ரும் என்பதில் துளிஅளவும் சந்தேகம் இல்லை.

"Black" ஒரு உணர்ச்சிகளை வெளிச்சம் போட்டு காட்டிய வண்ணபடம்....

Thursday, February 17, 2005

கொலுசு சத்தமும்...மல்லிகைப்பூவும்.

திருநெல்வேலி ல இருந்து மதுரை வழியில் தான் எஙக ஊரு. கிராமமும் நகரமும் கலந்து செய்த கலவை அது.. Main Road ல இருந்து குறுக்கால நடந்தா ஒரு Railway Gate வரும். Railway Gate ல இடது பக்கமா சீவிலப்பெரி, வலது பக்கம் குறிச்சிகுளம். Railway Gate ல இருந்து 10 நிமிஷம் எங்க colony. அந்த 10 நிமிஷம் station ல இருந்து வீடு வரதுக்குள்ள வேர்த்து கொட்டி இருக்கும். அதுவும் வெள்ளிக்ககிழமை உயிரே போய்டும். என்ன தான் சத்தமா சாமி பேர சொன்னாலும் எனக்கு கொலுசு போட்டு "செண்பகம்" வர சத்தம் மட்டும் எப்பவும் கேக்கற மாதிரியே இருக்கும்..

இந்த பயம் எப்ப ஆரம்பமாச்சுன்னு எனக்கு நாநே கேட்டபோது கிடைத்த பதில்.."8th la தேவதை இளம் தேவி.. உன்னை சுற்றும் ஆவி" ன்னு ஒரு பேய் பாட்டு வரும்.. அப்பன்னு தான் தோணுது. நான் பார்த்த முதல் பேய் படம் அது தான்...

கொஞ்சம் கொஞ்சமா விவரம் புரிய புரிய கிராமத்து பேய் கதையும் கூடவே தெரிஞ்சுகிட்டேன். அல்ப ஆயிசுல செததவங்க எல்லாம் "பேயா பிசாசா அலைவாங்க" ன்னு ஆழமா பதிஞ்சு போன நாட்கள் அது. "புளீய மரத்துல தான் அதிகமா பேய் இருக்கும்னு எஙக பாட்டி சொல்லுவாங்க. நம்ப முடியல.. இருந்தாலும் "இருக்குமோன்னு சந்தேகம் மட்டும் என் மனதில் முளைத்து இருந்தது. "செண்பகம் இஙக தாம்ல சுத்துது.." னு அடிக்கடி Raiwalystation Gatekeeper சொல்லுவாரு.

வீட்டுக்கு பக்கதில "பண்டாரதேவர் தென்னந்தோப்பு கிணறு. ஆழம் ஜாஸ்தி. அதுல குளிக்கறது ஒரு சுகம் தான். ஆனா பயமும் உண்டு. காரணம் "செண்பகம் தான்". 17 வயசுல தற்கொலை பண்ணி செத்து போய் இருக்கா அவ. அதுக்கு அப்பற்ம் இரண்டு மூணு கொலை ( தற்கொலை) அந்த கிணத்துல நடந்துஇருக்குன்னு மாடசாமி மாமா சொல்லுவாரு."செண்பகம்" ஆவி அங்க தான் எப்பவும் சுற்றிகிட்டு இருக்குமாம். Night சிரிப்பு சத்தம் கேக்கும்னு தோப்பு watchman சுடலை அடிக்கடி சொல்லுவாரு. "SOAP" சீக்கிரம் கரஞ்சு போகுமாம். "Shampoo" காணாம போகுமாம். சிவப்பு துண்டு நனைஞ்சு போகுமாம். தனியா குளிக்க போனா நம்ம கூட அவளும் வருவாளம். குளீச்சு முடிச்சி வெளிய வந்த அப்பறம் கூட "சலசலப்பு சத்தம்" கேட்டு கிட்டு இருக்குமாம். இது எல்லாம் கேட்ட அப்பறம் எனக்கும் பயம் இருந்தது.. ஆனால் காட்டிக்கொள்ளவில்லை.

வெள்ளிக்கிழமை ஆச்சுனா "செண்பகம்" Railway station பக்கத்துல இருக்கற "RiceMill" வீட்டுக்கு வருவா.. அவ பிறந்த வீடு அது தான். அவ செத்து போனதுக்கு அப்பற்ம் அவஙக வீட்டுல ஊர விட்டே போய்ட்டாங்க.. ரொம்ப நாள் பூட்டி கிடந்த வீடு ஒரு நாள் "பண்டாரதேவர்" நால RICEMILL ஆச்சு. ஆனா, அவரோட 23 வயசு சுபாஷ் செத்துபோன உடனே RICEMILL அ மூடிட்டாரு. இப்பவும் அது மூடி தான் இருக்கு. "குறிச்சிகுளத்து" ஆளூங்க கூட நிறைய பேரு NightShift முடிஞ்சுவரும் போது கொலுசு சத்ததை கேட்டுஇருக்காங்க. வெள்ளிக்கிழமை கண்டிப்பா அந்த Ricemill வாசல்ல மல்லிகைப்பூ இருக்குமாம். கொஞ்சம் கொஞ்சமா "செண்பகம்" எல்லார் மனசுலயும் ஆழமா பயத்த தெளிச்சுஇருந்தா..

ஒரு நாள் திடீருன்னு நல்ல இருந்த "நம்பிராஜ்" எதயோ பார்த்து பயந்து போயிருக்கானு சொல்லி அவனுக்கு "வேப்பல" அடிச்சத பார்த்தேன். அப்பறம் ஒரு நாள் Railway station Pump ல தண்ணி குடிக்கும் போது "GoodsTrain" ல அடிபட்ட ஒரு "தல இல்லா முண்டத்த" பார்த்தேன். இது எல்லாமே என்னோட "இளமைவயச" மிரள வைத்தது உண்மை தான். "செண்பகத்தை" நானும் நம்ப ஆரம்பித்து இருந்தேன்.

கிராமத்துல சில பேரு கண்ணுக்கு மட்டும் "பேய் தெரியுமாம்".. என்னோட Classmate மாரிமுத்து அம்மாவுக்கும் அப்படிதான். ஒரு வாட்டி "மாரிமுத்து"வ பேய் பிடிச்சுருச்சு.. 4 நாள் விடாம் காய்ச்சல், வாந்தி பேதி எல்லாம். Doctor கிட்ட போயும் சரியாகல. அன்னிக்கு Night அவங்கவீட்லுல மாடு, நாய் பூனை எல்லாம் கத்திக்கிட்டு இருந்திச்சாம். மாரிமுத்து அம்மா சந்தேக மட்டு வெளியவந்து பார்தது இருக்காங்க. அங்க..அங்க.. "செண்பகம்" விரிச்ச தலையோடு நின்னுக்கிட்டு இருந்துஇருக்கா.... மாரி அம்மா பயந்துபோய்.."செண்பகம் என் பையன விட்டு போயிடு.. உனக்காக சுடலமாடன் கோவில்ல நாளைக்கே கடா வெட்டி ரத்தத்தை RiceMill வாசல வைச்சுறேன்" ன்னு சொன்னாங்களாம். உடனே "செண்பகம்" பயங்கரமா சிரிச்சுகிட்டே போய்ட்டாளாம். ரத்தம் வைச்ச அடுத்த நாள் ஆச்சரியம் "மாரிமுத்து School க்கே வந்துட்டான். அவன் கிட்ட கதை கேட்டபோ "ஒரு வாரத்துக்கு முன்னாடி அவன் "மல்லிகைபூவ Ricemill வாசல்ல பார்த்து இருந்தத வீட்டுல சொல்லாம் இருந்துட்டானாம். அத சொல்லி இருந்தா மந்திரிச்சி தாயத்து கட்டி இருக்க்லாம்" ன்னு அவங்க அம்மா சொன்னாதா சொன்னான்.

அது நடந்து கிட்ட திட்ட ஒரு மாசம் ஆகி இருக்கு. காலைல Friends கூட அந்த கிணத்துல தொட்டு பிடிச்சு விளையாடும் போது எனக்கு முட்டுல அடிபட்டு "ரத்த காயம்".. அப்ப தான் மாரி சொன்னான். "எலேய்.. செண்பகம் ஒருவாட்டி ருசி பார்ததா மறுபடியும் வ்ருவா ல.." அதனால தனியா எங்கயும் போகாதனு சொன்னான்.

அதே நாள் Night ஒரு 9;30 மணி இருக்கும். அண்ணிக்கு அமாவாசை வெள்ளிக்கிழமை வேற.. Tution ல இருந்து வீட்டுக்கு வந்துகிட்டு இருந்தேன். அன்னிக்கு பார்த்து யாருமே அந்த நேரத்துல வரல.. Railway gate ல இருக்கற Tubelight வெளீச்சம் கொஞ்ச தூரம் தான் வரும். அதுக்கு அப்பறம் கும் இருட்டு தான். "சரி, ஒரு 10 நிமிஷம் Gate ல wait பண்ணுவோம், யாராவது வந்தா அவங்க பின்னாடியே போலாம். "செண்பகம் ஒருவாட்டி ருசி பார்ததா மறுபடியும் வ்ருவால.." ன்னு காலைல "மாரி" சொன்னது தேவை இல்லாம இப்ப நினைவு வந்தது. சும்மா இல்லாம என்னோட கண்ணு அந்த "RiceMill" பக்கம் போச்சு. பார்த்த உடனே செத்துட்டேன்.. ஆமாம் எப்பவும் இருட்டா இருக்கற அந்த Ricemill வீட்டுல கொஞ்சம் மங்கலா வெளிச்சம் இருந்தது. "செங்கசூளை" ல இருந்து வந்த "புகை" வேற என்னோட பயத்தை இரட்டிப்பு ஆக்கி இருந்தது. சுவத்துகோழி சத்தம் , தவளை சத்தம் எல்லாம் "Special Effects" கொடுத்து இருந்தது.

20 நிமிஷம் ஆச்சு. யாருமே வரல. "wait" பண்ணவும் பயமா இருந்துச்சு. சரி. எப்படியாவது போய்டுவோம்னு , Railway gate ல இருந்து நடக்க ஆரம்பிச்சேன் சாமி பேர சொல்லிக்கிட்டே. அடுத்த இரண்டாவது நிமிஷம். "என்ன யாரோ பின்தொடர்வது மாதிரி இருந்தது. Background ல எப்பவும் Light ஆ கேக்கற சத்தம் இப்ப தெளீவா கேட்டது பின்னாடி..சரியா Ricemill அ Croos பண்ணப்போ, அங்க இரு நாள் வரைக்கும் நான் பாக்காத "மல்லிகை.பூ என்னை பார்த்து சிரித்தது".. மரணத்தின் Calling Bell அடித்தது மாதிரி இருந்தது. அப்ப தான்.......... ஒரு கை என்னோட தோளை பிடித்தது..திரும்ப பயந்து .. "யாரு .. பின்னால?" என்றேன்.... வார்த்தை உள்வாங்கி இருந்தது. "நான் தான் ல.. செண்பகம்" என்றது அந்த குரல்.

Sunday, February 13, 2005

RainCoat

Bengali Director "Rituparno Ghosh" ரின் முதல் ஹிந்தி படம். Neeru ( Aishwariya ) வையும் Manoj ( AjayDevgan ) இருவருக்கும் நடக்கும் பேச்சுவார்த்தையே இந்த "Raincoat". ஐந்து பேரை வைத்து குழப்பாமல் , குதறாமல் திரைக்கதையை நகர்த்தியிருக்கிறார் Director.


"குடைக்குள் மழை" போன்ற முயற்சி தான் இந்த "Raincoat" உம். ஆனால் "Raincoat" வெற்றிபெற்றிருக்கிறது என்றே சொல்லலாம். Director படத்தின் நீளத்தை குறைத்து இருந்தால்,சில நேரங்களில் மந்தமாக இருப்பதை சரி செய்து இருக்கலாம். Camera கண்கள் நம்மை அதிகமாக கற்பனை செய்ய வைத்தது நூற்றுக்கு நூறு உண்மை. "AjayDevgan - Depressed" ஆளாக வந்து நம்மையும் சோகத்தில் இறக்கி இருக்கிறார். ஐஸ்வர்யாவின் கண்கள் அதிகம் பேசுகின்றன.

"AjayDevgan" னின் நண்பனின் மனைவி "AnnuKappor" குறைந்த நிமிடமே வந்தாலும் திருப்தியா செய்து இருக்கிறார். "BathRoom" லில் அழும்பொழுது இனிமேல் Shower ஐ திறந்து விட்டு அழுங்கள். " போன்ற வசனங்கள் ரசிக்க வைத்தன.. "Ajaydevgan" க்கும் "Annu Kappor" க்கும் நடந்த உரையாடல் திரைக்கு பின்னால் வருவது போல் எடுத்தது மிகவும் சிற்ப்பு...

"AjayDevgan" , "Ishwariya" வின் உரையாடலில் நீளம் கொஞ்சம் அதிகமாகவே இருக்கின்றன. ஆனால் சில உரையாடல்கள் சுவாரசியமாகவும் இருக்கின்றன... உதாரணம். Ishwariya Abroad போகாததற்கு சொல்லப்படும் பொய் காரணங்கள், சமைக்காதற்கு சொல்லப்படும் காரணங்கள்.

"HouseOwner" தன்னை அறிமுகப்படுத்தப்படும் காட்சிகள் மிக யதார்த்தம். AjayDevgan வோடு சேர்ந்து நம்மையும் "HouseOwner" ஐ சந்தேகப்பட வைத்தது அருமை..

ஒரு இரவல் "Raincoat" உண்மையை உணர்த்துவதால் இந்த பெயர்க்காரணம்.
குடையை ( குடைக்குள் மழை யை ) விட "Raincoat" அழகானது...

மொத்தத்தில் "Raincoat" கொஞ்சம் நீட்ட பட்ட கவிதை..

Thursday, February 10, 2005

மறக்க முயற்சி செய்கிறேன்.. முடியவில்லை

இன்று உன் வலி அதிகமாக இருக்கிற்து அகல்யா. என்னவோ தெரிய்வில்லை... உன் Photo வை மறுபடியும் பார்க்கிறேன். காலங்கள் ஓடினாலும் "எந்தா சுகம்தன்னே..." என்று நீ கேட்டு விட்டு போகிறாய் கனவிலும் காற்றிலும். "அகல்யா... நீ எங்கே இருக்கறாய்... இந்த கடிதம் உன்னை சென்று அடையுமா ??"

"எப்ப கல்யாணம்..?" என்றாள் யாமினி... ஒரே வாரத்தில் இத்தனை மாற்றமா ? உன்னோட Classmate Biju ஒரு ஓட்ட தமிழ்ல சொல்லறான். " இரண்டு பேரு மாத்திரம் photo எடுக்கட்டே.." நீ வெக்க பட்டு சிரிக்க .அப்படியே ஒரு Click.. நினைவு இருக்கிறதா "அகல்யா.." அதே photo தான் இது.

Msc First year Professor "Antony Raj " சொல்லராரு. "National Integration Camp" ன்னு ஒண்ணு இருக்கு பா. South India ல இருந்து நிறைய College participate பண்ணுவாங்க. ஒரு வாரம் program .National Integration Classes, Social Welfare schemes,அப்பறம் Cultural Programs கூட உண்டு.. Get Ready Ok ?" என்றார். உன்னை பார்க்க போகிறேன் என்று தெரியாமலே என்னை நான் தயார் படுத்திகொண்டு இருந்தேன்..

அந்த் வருஷம் "Shimoga University" , Karnataka வில் ( JOG Falls பக்கம் ) தான் Camp. ஊர விட்டு ஒதுக்கி வைச்ச மாதிரி அந்த

"Gigantic University Campus". சுற்றி பச்ச பசேல்ன்னு இருந்தது அந்த இடம். 150 பேரு இருப்போம் அந்த Campkku. தமிழ்நாடு ல இருந்து Loyolaa college அப்பற்ம் எஙக College. கேரளா ல இருந்து 4 college ஆனால் Majority Karnataka தான்.

உன்னை நான் இரண்டாவது நாள் தான் பார்த்தேன். ஒரு Room இன் வாசலிலில் நான் நின்று கொண்டு இருந்டதேன். ""Excuse me". என்றதது ஒரு குயில். திரும்பினேன். எனக்கு பிடித்த Sky Blue saree யில் நீ உன் கண்கள் என்னை பார்த்து இமைத்தது. நான் அந்த நிமிடம் இமைக்க மறந்து போனேன். "Excuse me" என்றதது அதே athee குயில். ...உன் வழியை மறைத்து கொண்டு இருந்த நான் பேசாமல் ஒதுங்கி போனேன். நீ திரும்பி பார்த்துகொண்டே என் கண்களில் இருந்து மறைகிறாய்.

நம் கண்கள் தான் அதற்கு பின்னர் அதிகமாக பேசி கொண்டன. நாம் அந்த 2 நாளீல் மிகவும் நெருங்கி இருந்தோம். எப்படி வந்தது இந்த நெருக்கம். அகல்யா.. ?"

"4th day, உனக்கு உடம்பு சரி இல்லாமல் போனது. Organizer இடம் பேசி விட்டு நானும் யாமினியும் உன்னை கூட்டி கொண்டு Hospital போகிறோம்.

Jeep ல் போகும் பொழுது நீ மயக்கம் அடைந்து என் தோள் மேல் சரிகிறாய். என் கண்கள் அன்று பசிபிக் கடல் ஆனது.
Doctor எழுதிகொடுத்த Tablets வாங்க ஓடினேன் .. ஞாபகம் இருக்கிறதா அகல்யா ? ( இன்றும் அந்த Medical Prescription என்னிடம் பத்திரமாக இருக்கிற்து அகல்யா )

"National Integration" Theme ல் ஒரு SKIT போட்டு 1st prize வாங்கியதில் "Hero image" வாங்கி இருந்தேன். எங்க College அ

"Special performance" பண்ண சொன்னாங்க. ஒரே நாளீல் புது Drama தயார்ஆகி இருந்தது. "3 minutes" கழித்து தான் என்னோட

"Introduction" அந்த Draama வில் அது வரைக்கும் "Audience கூட audience ஆ " நான் கலந்து இருப்பேன்.
"Drama" ஆரம்பிச்சு 2 நிமிஷம் ஆகி விட்டது. அப்பொழுது கூட எந்த Tension உம் இல்லாமல் இருந்தேனே. "எப்படி அகல்யா. .நீ என் பக்கத்தில் இருந்ததாலா ? உன் கை என்னை பிடித்து கொண்டிருந்ததாலா ?"

நாம் பிரிந்து செல்லும் நாள் வந்தது. "Group Photo" விற்கு நீ அன்று SareeyiL தேவதை போல் இருந்தாய். உன்கிட்ட அத சொல்ல வேண்டும் என்று எனக்கும் தோணவில்லை. தேவையும் படவில்லை. Address பரிமாறி கொண்டோம் அடுத்த வாரம் கண்டிப்பாக Tiruvandrum வருவேன் என்று உன் தலையில் சத்தியம் செய்தேன். கண்ணீரோடு நாம் கண்கள் பிரிந்து கொண்டன..

அதன் பின்னர் கிட்டதிட்ட 2 வருடங்கள் கேரளாவில் நாம் சந்திக்காத இடம் இல்லை. கோவளம், ஆலப்புழா Bback water,

பத்பநாபன் கோவில், திருவனந்தபுரம் Zoo.. இப்படி நிறைய இடங்கள்.. இந்த கால கட்டத்தில தான் College Fees அதிகமாகி இருந்தது.

Postman நெருங்கிய நண்பனாகி இருந்தான்.

திடீரென்று ஒரு நாள் , "Post" என்றது புதிய PostMan குரல்.
Postmaan கூட அன்று மாறி இருந்தான். ..கடிதம் உன்னிடம் இருந்து தான். நனைந்து போல் இருந்தது கடிதம். படிக்க ஆரம்பித்தேன்.

Dear
This is my last letter..( I am crying now). Please Dont reply for this Letter. Please Dont ask for any Reasons too. I am not in a

Position to explain. Understand my situation.. I am very Sorry.. ..BYE for EVER...
By AgaLyaa..

என் Suitcase குள் Post செய்ய பட்ட என்னுடைய பதில் கடிதம் இதோ.

என் உயிர் அகல்யா..
நீயே என்னை காயப்படுத்தாத போது நீ என்னை பிரிந்த காரணங்களா காயப்படுத்த போகிறது..

பின் குறிப்பு.
உடனே புறப்பட்டு Trivandram சென்றேன். ஆனால் அவளை பார்க்க முடியவில்லை. காரணகம் செய்தியாய் வந்தது. .......
மன்னித்து விடுங்கள்.
காரணத்தை இப்படி கதை எழுதி கண்ணீர் விட என மனது கேக்க வில்லை.. இருந்தாலும் இந்த கதையிலேயே அதை ஒரு இடத்தில்
சொல்லி விட்ட சமாதானத்தில இன்று மட்டும் "தூக்கமாத்திரை" இல்லாமல் தூங்க முயற்சிக்கிறேன்.

"மறக்க முயற்ச்சிறேன்.. முடியாமல் போனால் அதற்கு நான் மட்டுமே குற்றவாளி. "

Wednesday, February 09, 2005

பசுபதி.....

பசுபதி...

கூர்மையான கண்கள் , தமிழன் நிறம், உருட்டிய தேகம். தமிழ் திரைஉலகுககு கிடைதத ஒரு சிறந்த நடிகன் இந்த "கத்தாளத் தேவன்"..

கூத்து பட்டறை ( Theatre Artist ) யில் தடங்கி இப்பழுது உயரத்தில் பறந்து கண்டு இருப்பவன்.

"விருமாண்டி" யில தன்னுடைய பெயர் பதித்தவன...

கமலுககு இணையான பாத்திரம்.. மதுர பேச்சு, பேசும் கண்கள் .... சும்மா பயம் காட்டி இருப்பான் இந்த கத்தாளன்...

"விருமாண்டி" படததை பார்ததுவிட்டு வரும் பழுது "யாருடா.. இந்த கத்தாளத் தேவன் ??" என்ற கேள்விக்கு "அதான் டா.. இந்த "தூள்"

படத்துல கூட வில்லிக்கு தம்பியா வருவானே " அவன் தான் டா இது என்றான் என் நண்பர் சதா....

"கமல்" படத்தில் பெரும்பாலும் கமலே அதிகம் dominate செய்வது எல்லாரும் தெரிந்த விஷயமே.. ஆனால் இந்த "கத்தாளன்" கமலுக்கு ஈடு இணையாக நடித்துருப்பது கண்டிப்பாக பாராட்டதக்கது.

இந்த வாரம் "கன்னத்தில் முததமிட்டால்" பார்க்க நேர்ந்தது... அட. அங்கேயும் இந்த "கத்தாளத் தேவன்" , நந்திதா தாஸ் இன் அண்ணனாக, கையில் துப்பாக்கியுடன்.... பாததிரமாகவே மாறி இருந்தான்.

"இயற்கை" யில் வரும் பாதிரியாரும் இந்த "கத்தாளத் தேவனே.."...
அருள், திருப்பாச்சி யிலும் இவனுககு வில்லன் வேடமே.

தமிழ உலகுக்கு ஒரு சிறந்த நடிகன் கிடைத்து விட்டான்....


கடைசி செய்தி...

"அன்பு" இவர் கமலிடம் "Asst Director" ஆக பணிபுரிநதவர்... இப்பழுது இவர் எடுக்கும் புதுபடத்திற்கு "பசுபதி" தான் Hero...

"ொத்தாளா...நீ ஒரு Round வர வாழ்த்துக்கள். "

Monday, February 07, 2005

நான் படித்தது.. என்னை ரசிக்க வைத்தது.!!

1) "சாகர வரைக்கும் திருத்திகொண்டு தான் இருப்பீர்களோ ?" - பாடகர்.
"யார் சாகும் வரைக்கும்" - நான்.
"நாம் இரண்டு பேர் சாகும் வரைக்கும்." - பாடகர்.
"இல்லை. தமிழ் சாகா வரைக்கும்." - நான்.

ஒருஒரு முறையும் ரோஜாக்கள் என்று தான் நம் கைகள் குலுக்கி கொள்கின்றன, ஆனால் கைகள் பிரியும் போது ரததம் வழிகின்ற்து.

"ழ்" கரம் தான் இவருக்கு பெரும் பிரச்சனை.

"ஜேசுதாஸ்" ஐ பற்றி.


2) ஞாபகம் இருக்கிற்தா. அன்று சந்தோஷத்தில் இருநதோம். நீ என்னை துரத்த , இருவரும் ஓடினோம். கடைசியில் மழை வந்ததால் நின்று விட்டேன். அன்று உன்னால் பிடிக்க முடிநதது. ஆனால் இன்றும் ஓடிக்கொண்டு தான் இருக்கிறோம். ஆனால் வேறு வேறு திசையில்.

உன் பாசறையில் அம்புகள் செய்யபடுகின்றன. ஆனால் என் தொழிற்சாலையில் கவசங்கள் மட்டுமே தயாரிக்கபடுகின்றன.


"இளையராஜா" வை பற்றி...


கவிஞர் வைரமுத்து அவர்களின்
"என் குளத்தில் கல் எறிந்தவர்கள். " புத்த்கத்தில் இருந்து நான் படித்தது.. என்னை ரசிக்க வைத்தது

Sunday, February 06, 2005

முதன் முறையாய்....

வானத்தை வசப்படவைத்த என் இனிய அனைவருக்கும் என் நன்றி..

இது அறிவியியலின் வளர்ச்சி மட்டும் இல்லை...
என்னுடைய வளர்ச்சி. நம்முடைய வளர்ச்சி.

இனி இனிதாய் தொடங்குகிறேன்.. உங்களையும் பக்கத்தில் வைத்து கொண்டு...