என் மனசாட்சியிடம் திருடியது

என் பெயர். "பிரகாஷ்". படித்தது "திருநெல்வேலி" யில்..வேலை "சிங்கார சென்னை" யில்.... தற்சமயம் "Tokyo" வில். "என்னை சுற்றி .. நம்மை சுற்றி.. நடந்தவை, நடப்பவை பற்றிய அலசல் .. இந்த வலைப்பதிவு...

Monday, January 21, 2013

2012 - தமிழ் சினிமா

2012 ல் தமிழ் சினிமாவில் 150 படங்களுக்கு மேலாக வெளியிடப்பட்டு உள்ள. அதில் இருந்து குறிப்பிடத்தக்க சில படங்களை முன்னிறுத்துவது இந்த கட்டுரையின் நோக்கம்.
எல்லா வகை (genre) சினிமாவையும் ஒரே தராசில் வைத்து மதிப்பிடுவது சரியாகாது என்பதால் படங்களை அதன் Genre முலமாக அலசிப்பார்க்கலாம்.
வரலாற்று பின்னணியில் வந்த படங்களில் அடையாளப்படுத்த வேண்டிய படங்கள் இரண்டு. 1.பாலை. 2.அரவான்.  இரண்டு படங்களிலும் தமிழர்களின் ஒரு காலத்து வாழ்வியல் முறையை அருமையாக பதிவு செய்து இருப்பது இந்தப்படங்களின் சிறப்பு. இருந்தும் அரவான் ( வசந்த பாலன்) க்கு கிடைத்த அங்கீகாரம் பாலை படத்திற்கு கிடைக்கவில்லை. அங்கீகாரத்தை விடுங்கள், பாலை படத்தை வெளியிட சரியான தியேட்டர் கூட கிடைக்கவில்லை என்பதே நிதர்சனம். அத்திபூத்தால் போல் அரிதாக எடுக்கும் முயற்சிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும், இல்லையென்றால் அரிதான முயற்சிகள் எடுக்கப்படாமலேயே போய்விடலாம்.
2012 ஆம் வருடத்தில் நிறைய வெற்றியை வாரிக்கொடுத்தது காமெடிப்படங்கள். அந்த வகை படங்களில்  நம்மை சிரிப்பால் கட்டிபோட்ட சில படங்கள் 1. கலகலப்பு 2. ஒரு கல் ரு கண்ணாடி 3. அட்டகத்தி, 4.நடுவில கொஞ்சம் பக்கத காணோம் மற்றும் 5. காதலில் சொதப்புவது எப்படி.
சுந்தர்.C யின் கலகலப்பு அரத பழசு கதையைக்  கொண்டு இருந்தாலும் படம் தொய்வு இல்லாமல் இருப்பது பலம். ஒரு கல் ஒரு கண்ணாடி - உதயநிதி ஸ்டாலின் ஹீரோவாக அறிமுகம் செய்யப்பட்ட படம். இயக்குனர் ராஜேஷ் ஏற்கனவே கொடுத்த  சிவா மனசுல சக்தி,பாஸ் என்கிற பாஸ்கரன்  போன்ற அதே template என்றாலும் ராஜேஷ் கதையை , ஹீரோவை விட காமெடியன் சந்தானத்தை நம்பி படத்தைக் கொடுத்து வெற்றி பெற்று இருக்கிறார். அடுத்த முறையும் இதே Template இல் ராஜேஷ் படம் எடுக்காமல் இருப்பது அவருக்கு நல்லது. அடுத்தது அட்டகத்தி. இதுவரை கிராமிய காதல், நகர்ப்புற காதலை படம் பிடித்த இயக்குனர்கள் இந்த படத்தில் புறநகர் காதலை படம் பிடித்தது ஒரு புதுமை. எந்த ஒரு அறிமுகமும் இல்லாத நடிகர்கள், சொல்லிகொள்ளும் படி அழுத்தம் இல்லாத கதை இப்படி இருந்த போதிலும் பெரிய வெற்றியை தேடிக்கொண்ட படம். இயக்குனர் ரஞ்சித் அவர்களுக்கு வாழ்த்துக்கள்.



நடுவில கொஞ்சம் பக்கத்த காணும் !. படத்துல பாட்டு காணோம், ஹீரோயின் ஹீரோ ரொமாண்டிக் காணோம், Foreign Location காணோம், பெரிய கதைன்னு பெரிசா எதுவும் காணோம். மேலாக  "என்னாச்சு?..."  என்கிற வசனத்தை படம் முழுவதும் பேசிக்கொண்டீருந்தாலும் படத்தை அலுக்காமல் கொண்டு சென்ற பாலாஜி தரணிதரன் கண்டிப்பாக பாராட்டப்பட வேண்டியவரே!.
காதலில் சொதப்புவது எப்படி :சன் டிவி யின் நாளைய இயக்குனர் பாலாஜி மோகன் இயக்கிய படம். நடிகர் சித்தார்த்தே தயாரித்து நடித்த படம். ஒரு குறும்படத்தை வெள்ளித்திரையில் முழு படமாக காட்டுவதற்கு ஒரு திறமை வேண்டும். அந்த அடிப்படையில் கண்டிப்பாக பாலாஜி தரணிதரன் வரிசையில் இந்த பாலாஜியையும் சேர்த்து விடலாம். இவர்களுக்கு முதல் படி அமைத்து கொடுத்த "நாளைய இயக்குனர்" நிகழ்ச்சி கண்டிப்பாக ஒரு பெரிய படிப்பின்மையும் நல்ல மேடையும் பேரையும் வாங்கிக் கொடுத்துள்ளது என்பது குன்றின் மேலிட்ட விளக்கு! 
(serious)அழுத்தமான கதைக்களங்களை கொண்ட படங்களில் குறிப்பிட்டு சொல்லகூடியவை. 1. வழக்கு  எண் 18/9. 2. நீர்ப்பறவை. 3. சாட்டை மற்றும் 4. கும்கி.
வழக்கு  எண் 18/9: பாலாஜி சக்திவேல் காதல் , கல்லூரியை தொடர்ந்து விளிம்பு நிலை மனிதர்களின் ஆசாபாசங்களை , உணர்ச்சிகளை கண் முன்னே நிறுத்திய படம். கதை சொல்லல் முறையில் இருந்து படத்தை கையாண்ட விதத்தில் ரசிகர்களின் உள்ளங்களில்  பாத்திரங்கள் ஆழமாக பதிந்து விடுகின்றனர். ஒரு யதார்த்த வாழ்கையை நேர்மையாக படம் பிடித்த பாலாஜி சக்திவேலுக்கு HatsOff
தென்மேற்கு பருவக்காற்று புகழ் சீனு ராமசாமியின் நீர்ப்பறவை அழுத்தமான சினிமாவின் தரவரிசையில் நிச்சியம் ஒரு மைல்கல். யாரும் எளிதில் தொட முடியாத ஒரு sensitive oneliner யை சுற்றி கதை அமைத்து அதை திறம் பட படம் பிடித்து "நச்" என்று சொல்லிய விதத்தில் இயக்குனர் தமிழ் சினிமாவின் வரலாற்றில் நீங்க முடியாத இடத்தை பிடித்து உள்ளார்.
பிரபு சாலமனின் கும்கி : யானை மாறாட்டம். கும்கி என்கிற யானைக்கு பதில் கோயில் யானை போனால் என்ன ஆகும் என்பதே ஒரு வரிக்கதை. யானைக்கதையோடு  காதல் கதையும் ஒன்று சேர்ந்து காட்டில் பயணிக்கின்றன . எடுத்துக்கொண்ட கதைக்களம், படம் பிடித்த கோணங்கள் ஆகியவை பதிய வைக்கிறது.
 மேலே குறிப்பிட்ட படங்களின்  இயக்குனர்கள் நமக்கு ஏற்கனவே பரிச்சயம் ஆனவர்கள் தான்,
ஆனால்  "சாட்டை" ஒரு அறிமுக இயக்குனர் அன்பழகன் இயக்கிய படம். ஆசிரியர்களுக்கு சாட்டை முலம் "பளிச் " "பளிச்" என்று அறிவுரைகள் கொடுத்து நல்ல பேரை வாங்கி கொள்கின்றார் இயக்குனர். தயாளன் என்ற பாத்திரத்தில் சமுத்திரகனி தன்பாத்திரத்தை மனதில் பதிய வைக்கிறார்.
பொழுதுபோக்கு வகை படங்களில் 2012இல் குறிப்பிட வேண்டிய சில படங்கள்  சுந்தரபாண்டியன் மற்றும் துப்பாக்கி.
சசிகுமார் ஒரு சாக்லேட் ஹீரோவாகவோ அல்லது "பக்கத்துக்கு வீட்டு பையன்" சாயலோ இல்லாமலேயே எப்படியோ மக்களை தன்பக்கம் ஈர்த்து வைத்து இருக்கிறார். குறிப்பாக அவருக்கு தென்தமிழ்நாட்டு ரசிகர்கள் அதிகம். படம் சுப்பிரமணியபுரம் சாயலில் இருந்தாலும் ஒரளவு வெற்றியை தக்கவைத்து கொள்கிறது.
2012 ஆம் வருடம் விஜய்க்கு சுக்கிரதிசை போலும்!. தொடர்ச்சியாக தோல்வியை தழுவிக் கொண்டு இருந்த நேரத்தில் ஆரம்பத்தில் வெளிவந்த ரீமேக்-நண்பனும், கடைசியில் வெளிவந்த துப்பாக்கியும் சிறந்த வெற்றியை கொடுத்தது. விஜயகாந்த், அர்ஜுன் நடிக்கவேண்டிய பாத்திரத்தில் விஜய். தீவிரவாதிகளை  தனியே அழித்து நொறுக்குகிறார். Entertaintmentக்கு தேவையான அனைத்து அம்சமும் கலந்து மறுபடி விஜய் வெற்றி வாகை சூடிஇருக்கிறார் துப்பாக்கி மூலமாக!
இது வரை குறிப்பிட்ட படங்களை தவிர மேலும் இரண்டு படங்களைப் பற்றி குறிப்பிடாமல் 2012ஆம் வருடம் முழுமை அடையாது. 1.அம்புலி தமிழ் சினிமாவின் முதல் 3D படம் என்ற பெருமையோடு தமிழ் சினிமா வரலாற்றில்  ஒரு இடத்தை பிடித்துக்கொள்கிறது. அடுத்தது "நான் ஈ "..ஒரே ஒரு "ஈ" யை வைத்து ராஜமௌலி என்ற இயக்குனர் ரசிகர்களை கட்டிபோடுகிறார். சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் ரசிக்கும்  படியான நல்ல படத்தை கொடுத்த இயக்குனருக்கு மனமார்ந்த நன்றிகள்.
இந்த வருடம் பெரிதாக எதிர்பார்க்கப்பட்டு தோல்வியை தழுவிய படங்கள் பல. முகமூடி, மாற்றான், தாண்டவம், பில்லா-2, என்று இந்த வரிசை நீண்டு கொண்டு போகிறது.
ஆக, 2012 இல் வெற்றி பெற்ற பெரும்பான்மையான படங்கள் சிறிய பட்ஜெட் படங்களே எனலாம். இந்த படங்களுக்கு பெரிதாக "Starvalue"யும் இல்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. 2013ல் தமிழ் சினிமா மேலும் பல வெற்றி படங்களை கொடுப்பதற்கு வாழ்த்துக்கள்!


  
2012ல் தமிழ் திரை இசையில் குறிப்பிடும் படியாக சில நிகழ்வுகளும் அரங்கேறின. 3 படத்தின் தமிழ்(தங்கிலீஷ்?) வரிகளை கொண்ட "why this Kolaveri " பல பரிமாணங்களில் பலராலும்  சிலாகிக்கப்பட்டது .
இளையராஜாவின் ரசிகர்களுக்கு "நீ தானே என் பொன்வசந்தம்" இசை வெளியீட்டு விழா ஒரு பெரிய கொண்டாட்ட திருவிழா!!. ராஜாவின் இசை விரும்பும் ரசிகர்கள் கண்டிப்பாக பார்க்க வேண்டிய நிகழ்ச்சி!.
டோக்கியோவில் முதல் முதலாக துப்பாக்கியை தியேட்டரில் வெளியிட்டது ஒரு புதிய முயற்சி. வரவேற்க்கத்தக்கது!. இந்த வருடம் மேலும் பல புதிய படங்கள் வெளி வரலாம். பால் அபிஷேகம், கட்-அவுட், விசில் சத்தத்தையும் இந்த டோக்யோ எதிர்பார்க்கலாம்.! வாழ்த்துக்கள்!

1 Comments:

Blogger Krish R said...

வாங்க வாங்க பிரகாஷ் அண்ணாச்சி.... ரொம்ப நாளுக்கு அப்புறம் உங்க பதிவ வாசிக்கிறேன்... இதோ என்னோட பின்னூட்டம்...

இந்த வரிசையில் நான் நிறைய படங்கள் பார்க்காவிட்டாலும் சில படங்கள் உண்மையிலேயே நன்முத்துக்கள் தான்..

1) நடுவுல கொஞ்சம் பக்கத்த காணும்... நிஜமாவே ப்ப்ப்ப்ப்பா..

2) கும்கி.. அடுத்தடுத்து ரெண்டு தரமான படங்கள்.. பிரபுசாலமன் வி ஆர் வெய்ட்டிங் ஃபார் யுவர் ஹாட்ரிக்...

3) ஒ கே ஒ கே : ஓ கே ஓ கே....


4) சாட்டை : நான் பார்த்து ரொம்ப ரசிச்ச சமீபத்திய படம்... பொதுவா வாத்தியார்னா வெண்ணிறாடை மூர்த்தி, பாண்டு வகையறாக்கள் மாதிரியான ஆட்கள்னும், டீச்ச்ர்னா அடிவயித்திலெந்து ரெண்டு இன்ச் கீழ பொடவகட்டுன நாட்டாமை டீச்ச்ர் மாதிரியோ அல்லது முந்தானை முடிச்சு டீச்சர் மாதிரியோ காட்டுற தமிழ் சினிமாவின் கிளிஷேவை ஒடச்சு, எல்லருக்கும் வாழ்க்கையில ஃபேவரைட் டீச்ச்ர் / சார் ஒருத்தர் இருப்பார்னு காமிச்ச அன்பழகனுக்கு ஹாட்ஸ் ஆஃப்... இதுல வர்ர பல சமாச்சாரங்கள் அப்படியே நம்மூர்ல நடக்கற விஷயங்கள் தான்.. ரியலா திரையில் கொண்டு வந்தது பாராட்டுக்குரியது...

அப்புறம் நம்ம கள்வாணிய மறந்துட்டீங்களே!!!!!!

11:31 AM  

Post a Comment

<< Home