என் மனசாட்சியிடம் திருடியது

என் பெயர். "பிரகாஷ்". படித்தது "திருநெல்வேலி" யில்..வேலை "சிங்கார சென்னை" யில்.... தற்சமயம் "Tokyo" வில். "என்னை சுற்றி .. நம்மை சுற்றி.. நடந்தவை, நடப்பவை பற்றிய அலசல் .. இந்த வலைப்பதிவு...

Thursday, March 10, 2005

ஆளு இல்லாத கடைக்கு

ஆளு இல்லாத கடைக்கு யாருக்குடா டீ ஆத்தற ? அப்படித்தான் இருக்கு என்னோட கடை.

துறந்து வைச்சு ஈ மொய்க்குது . டீ கடைல ஒரேஒரு டீ ய வச்சுகிட்டு ஒரு மணிநேரம் பேப்பர் படிக்கற மாதிரிகூட இங்க யாரும் இல்ல.
சலூன் கடையில முடி வெட்டிக்க போறேமோ இல்லயோ, நல்ல தலைய வாரிட்டு திரும்பி வந்துருவோம்..அங்க கூட கடைக்காரன்க்கு தெரியும் யாரு வந்தாங்க்ன்னு.. இந்த கடைல அதுவும் இல்ல..

ஒரு வேளை சரக்கே இல்லயோ அல்லது சரக்கு மாஸ்டர் சரி இல்லயோ ?? சரி, இப்ப தானே கடை ஆரம்பிச்சு இருக்கோம்....
pickup பண்ணீக்கலாம்....


சரி புலம்பறத விட்டுட்டு வந்த விஷயத்த சொல்லறேன்...

ஒரு வருஷம் கழிச்சு இந்தியா போறேன்... இந்தியா ல போய் வலைப்பதிய முடியுமான்னு தெரியல.. அதனால ஒரு 2 வாரத்துக்கு விடுமுறை விட போறேன் இந்த வலைப்பதிவுக்கு...
கண்டிப்பா இந்தியால இருந்து வந்ததுக்கு அப்பறம் நிறைய matter இருக்கும்னு தோணுது...

அதுவரை உங்களிடம் இருந்து விடைபெறுவது..

கடை நிறுவனர்..
பிரகாஷ்

Sunday, March 06, 2005

கவிதை...

சத்தியமா.. நான் எழுதலங்க....... நான் படித்து ரசிச்சது..

தண்டவாளத்தில் சாய்ந்து
கிடக்கும் ஒற்றை
பூ நான்.
நீ
நடந்து வருகிறாயா ?
ரயிலில் வருகிறாயா ?

- பழனிபாரதி.

நீ கொடுத்த முத்தத்தை
காற்று பிடுங்கி விட்டது.
அன்பே
இன்னொன்று தருவாயா ??
கன்னத்தில்....

( ஆனந்த விகடன் )

குருடனின்
சோற்றுதட்டில் பிரியாணி
அகப்பட்டது
ஒரு ஆட்டுக்கண்.

( எங்கோ படித்தது.. )

Wednesday, March 02, 2005

கடவுளும்..காயமும்

"கடவுள் இருக்காரா டா ? எங்கடா இருக்கார் ?" னு ஸ்டாலின் கேக்கும் போது நான் பேச மாட்டேன். "நான் Churchக்கு போயே 7 வருஷம் இருக்கும் டா..சரிடா. அப்படியே நீ சொல்லற மாதிரி கடவுள் இருக்காருன்னா எதுக்கு டா, எனக்கு மட்டும் எல்லாம் தப்பாவே நடக்குது ??. " னு ஒரு நாள் புலம்பி தள்ளினான். ஒரு 20 வயசு பையன கடவுள் கொஞ்சம் அதிகமாகவே சோதிக்கராரோன்னு தோணும்.எனக்கு ஸ்டாலின் திசை தெரியாமல் அலையும் படகு போல தெரிந்தான்..

ஸ்டாலின் ஐ சுத்தி எல்லாமே அவிழ்க்கபடாத முடிச்சுகளாகவே இருந்தன. சமுதாயத்தில் உள்ளவர்கள் சாக்கடையை உடம்பில் பூசிக்கொண்டு "சந்தனம்.." என்று நினைப்பவர்கள் தான் அதிகம் என்பது அவனுடய வேதாந்தம். அது ஏனோ, என்னிடம் மட்டும் பொங்குவான். என்னால் அவனை தேற்ற முடிந்ததே தவிர, அவன் காயங்களை ஆற்ற முடியவில்லை..

"எங்கஅக்கா "Julie" கிட்ட பேசி 3 வருஷம் இருக்கும் டா,இப்ப எல்லம் வீட்டுல யாரு கூடவும் பேசரது இல்லா டா. அம்மா உள்பட.." னு சொல்லுவான். 12th Fail,
ITE ல சேர்ந்தான் அங்கயும் சரிவரல. "இந்த சூழ்நிலைல எப்படிடா படிக்க முடியும் ..சொல்லு ??.." என்று படிக்காததற்க்கு சூழ்நிலையை காரணம் காட்டுவான்.16 வயதில் ( விவரம் புரிஞ்ச வயசு ) "பீடி தான் கவலைக்கு விடை என்ற தேட ஆரம்பித்தவன், Kings, கள், Quarter, பான்பராக், இப்படி அனைத்திலும் தேடினான்.. பாவம் பைத்தியகாரன் !!!. அவனுக்கு விடை மட்டும் கிடைக்கவே இல்லை...

அவனுக்கு பிடிச்ச விஷயம் கிரிக்கெட் மட்டுமே. பிரச்சனைகளை கிரிக்கெட் பாலாய் நினைத்து, அதை முடிந்த வரை பலம் கொண்டு மட்டையால் விளாசுவான்.. பந்து "Boundry" யை தொடுமே ஆனால் அவன் பலமாக சிரிப்பான், எதோ பிரச்சனைகளை இவன் ஓட விரட்டியது போல்.. ஆனால் உண்மை நிலை வேறு. சமூகம தான் அவனையும், அவன் குடும்பத்தையும் "கிரிக்கெட் பந்தின் நூல் தெரியும்" வரை பிய்த்து இருந்தது. காரணங்கள் கோரமானது, கொடூரமானது.யாரையும் குத்தி கிழித்து புண்படுத்தி விடும் கூர்மை உடையது..

அன்று ஒரு நாள் "Royal Cricket Team" மொத்தமும் இருந்தது குட்டி சுவரில். வழக்கம் பொல ஓட்டவாய் ஈஸ்வரன் உளறி கொண்டு இருந்தான். "இன்னிக்குபால்பாண்டி இல்ல, அவரு தாம் ல ..Arun Wines...ஸ்டாலின் வீட்டுக்கு வந்து .. கன்ன பின்னானு கெட்ட வார்த்தை ல பெசினாரு...அவர் மாட்டுக்கு வீடுக்குள்ள போய்ட்டாரு?.கூட தடிமாடுங்க மாதிரி 3 பேரு வேற ??..." என்று அக்கம் பக்கம் பார்க்காமல் உளறியவனை சந்துரு தான் திசை திருப்பினான். "...Night Second Show போவாமா டே.. ? " என்று.

இதை கேட்டதில் ஸ்டாலின் காயங்கள் மேலும் கொப்பளங்கள் ஆகி இருந்தன. அவன் கண்களிள் கண்ணீர் கசிய தொடங்கியது. இருட்டை நோக்கி நடந்த அவனுக்கு கால்கள் பிண்ணிகொண்டன. அன்று எனக்கு பட்டும் படாமலும் தெரிந்த ஸ்டாலின் விஷயங்கள் நிர்வாணமாக்க பட்டன. ஸ்டாலின் அப்பா ஸ்டாலின் இன் சித்தியுடன் கோயம்புத்தூரில் இருப்பது, Julie உம் Baskar உம் ........., பின்னர், தட்டிக்கேக்க முடியாமல் வீட்டினுள் அத்துமீறும் கடன்காரர்கள்( ஸ்டாலின் அப்பா வாங்கியது தான் கடன் அனைத்தும்) ...இப்படி அடுக்கு அடுக்காய் .....ஸ்டாலின் அம்மாவின் "Co.op Store Clerk" உத்தியோகம் Julyயின் காலேஜ் படிப்பிற்க்கும், ஸ்டாலின் தம்பி இன் ஸ்கூலிற்க்கும் மட்டும் போதுமாய் இருந்தது...அதனால் கடன் குட்டி போட்டு,பேரன் பேத்தி எடுத்து இருந்தது என்று அனைத்தும் விளங்கியது. ஸ்டாலின் படிப்பின்மையும், கையாலாகதனமும் அவனது வாயை நன்றாக கட்டி இருந்தது வீட்டில்.

நாட்கள் நகர்ந்தன. அவன் காயங்கள் சீழ் வைத்து ஈ மொய்க்க ஆரம்பித்து இருந்தது. சரி. "தற்காலிக விடுமுறை" தான் விடை தரும் என்Dரு ஸ்டாலின் ஊரை விட்டே ஒடினான்..6 மாதம் வேலை பார்த்து விட்டு வீடு திரும்பினான். திருப்பூர் இல் வேலை பார்த்ததால் "4 பனியனும்", கொஞ்சம் கைகாசு மட்டுமே வீட்டில் கொடுக்க முடிந்தது. பின்னர் ஊரிலேயே காலையில் "Tea கடை cashier", இரவு "புது காலனியின் Night watchman" என்று ஸ்டாலின் பல அவதாரஙள் எடுத்து உழைக்க ஆர்ம்பித்தான். அவன் காயங்களும் சற்று ஆற தொடங்கி இருந்தன..என் வீட்டிற்க்கு வருவதை கூட குறைத்து இருந்தான். முதல் விடிவு ஸ்டாலின் இன் தம்பியை ( 8 வயது ) அவன் அப்பா கோயம்புத்தூர் கூப்பிட்டு கொண்டதுதான்...

நானும் வேலை நிமித்தம் Bangalore ல் இருந்தேன். 4 வருடம் கழித்து சந்துருவின் கல்யாணத்தில் அனைவரையும் பார்த்தென். "எலேய் ஸ்டாலின் தூத்துக்குடி Spic ல வேலை செய்தாம் ல.....போன வருஷம் "Julie" பையனுக்கு "Paptism" பண்ணாங்கல. Basker கூப்பிட்டதால நாங்களும் போய் இருந்தோம் ல" என்றான் ஈஸ்வரன். சந்தோசமாய் இருந்தது..ஸ்டாலின் இன் Address கேட்டேன் ஈஸ்வரனிடம். "Address இல்ல.டே ஆனா இந்த PP phone number கொடுத்தான் ல " என்றான்.

என் Mobileஇல் இருந்து "43288354" டையல் செய்தேன். ""யாரு என்ன வேணும் ?" எடுத்து பேசியது ஒரு ஆண் குரல். "ஸ்டாலின் இருக்கனா" என்றேன்.. "யாரு..ஸ்டாலின் தம்பியா..ஒரு நிமிஷம் line ல இருங்க....எலேய் சின்ன பையா, பக்கத்து வீட்டு தம்பிக்கு phone. ஓடி போய் கூட்டியா போ" என்று யாருக்கோ சொல்லியது எனக்கும் கேட்டது. "அரிசி நல்ல அரிசி மா, தோசைக்கும் நல்ல இருக்கும், சோறு வடிச்சீங்கன்னா பூ போல இருக்கும் மா." phone ஐ அப்படியே வைத்து விட்டதில் அது ஒரு மளிகை கடை என்று எண்ணிகொண்டேன்.

2 நிமிடம் கழித்து, "ஹலொ, யாரு பா ??" என்றது ஒரு பெண் குரல்..ஸ்டாலின் அம்மாவாக இருக்ககூடும் என்று ஊகித்துகொண்டேன். "நான் ஸ்டாலின் Friend .....மா..எப்படி மா இருக்கீங்க ?". என்று என்னை அறிமுகம் படுத்திகொண்டேன். "தம்பி....நீயா பா....நாங்க கர்த்தர் கிருபைல நல்லா இருக்கோம்....நீ நல்லா இருக்கியா பா ? " என்னை அன்பாக விசாரித்தார்காள். அவர்கள் வார்த்தையில் வேதனையின் வாடை அரவே இல்லை. மாறாக நிம்மதியின் நருமணம் மட்டுமே இருந்தது ."ஸ்டாலின் இல்லயாமா ?" என்றேன். "இல்ல பா.. இப்ப தான் Churchக்கு போனான் பா. ஏதோ "கூட்டு பிராத்தனையாம்"..பா.. அவன் வந்த உடனே phone செய்ய சொல்லுதேன்.. ..இப்ப வைக்கட்டுமா பா? " என்று phone ஐ வைத்த போது என் கண்களில் ஒரே ஒரு துளி நீர் மட்டும் எட்டி பார்தது ஆனந்தத்தில்..