என் மனசாட்சியிடம் திருடியது

என் பெயர். "பிரகாஷ்". படித்தது "திருநெல்வேலி" யில்..வேலை "சிங்கார சென்னை" யில்.... தற்சமயம் "Tokyo" வில். "என்னை சுற்றி .. நம்மை சுற்றி.. நடந்தவை, நடப்பவை பற்றிய அலசல் .. இந்த வலைப்பதிவு...

Tuesday, April 12, 2005

"ராம்" - திரைவிமர்சனம்

இயக்குநர் அமீரின் ( மெளனம் பேசிய்தே..) பாலாவிடம் பணியாற்றியவர் "மெளனம் பேசிய்தே" வை தொடர்ந்து ஒரு வித்தியாசமான திரில்லரை கொடுத்துள்ளார்.. திரில்லருக்கு தேவையான வேகம் முதல் பாதியில் இருந்தாலும் இரண்டாவது பாதியில் மெதுவாக திரைக்கதை நகர்த்தப்படுகிறது. பாலாவின் Assistant என்பதால் என்னவோ "மனம் பாதிக்கப்பட்ட" ( ஆன்மீகநாட்டமுடைய) பாத்திரத்தை Hero வாக தேர்ந்து எடுத்துஉள்ளார் இயக்குநர். பாலாவின் பாதிப்பு நிறைய இடங்களில் தெரிகிறது.

படத்தின் முதல் காட்சியில் வீட்டில் உள்ள அழகான photo albums, TV இன் சத்தம் என்று காட்டிவிட்டு அடாதடியாக ரத்தவெள்ளத்தில் Heroவயும், அவன் அம்மாவையும் காட்டும்போது Director நிமிர வைக்கிறார். அடுத்த அடுத்த மாற்றங்கள் நம்மை சீட்டோடு கட்டிப்போட்டு விடுகிறது. Hero ராம் யார் எப்படிப்பட்டவன் என்று நாம் கற்பனை செய்து கொள்ளும்போது காட்சிகளும் அதே கோணத்தில் கொண்டு செல்லப்பட்டு இருப்பது நல்ல கதை சொல்லும் பாணி என்று சொல்லலாம். உதாரணம் சரண்யா (ராமின் அம்மா) அவன் "Mentally Retrated" இல்லை என்று கூறும் காட்சி.
"ஜீவா" ( தித்திக்குதே ) நாயகன் இதற்காக உடம்பையும் வளர்த்துகொண்டு இருக்கிறார். அவர் முக பாவங்கள் அளவுக்கு வசனங்கள் சரியாக வரவில்லை. இது முழுக்க முழுக்க "Director" இன் படம் மட்டுமே. சரண்யா மெல்லிய குரலில் நன்றாய் செய்துஇருக்கிறார். "Police Commissor" ஆகவரும் ரகுமான், "SubInspector" மலைச்சாமி ஆக வரும் முரளி( டும் டும் டும், ஜெமினி) கூட பாத்திரத்தைஉணர்ந்து செய்துஇருக்கிறார்.
"கஞ்சா கறுப்பு" ( பிதாமகனில் ஒரு காட்சியில் வந்து கஞ்சாஇழுக்கும் வண்டி இழுக்கும் தொழிலாளி) "வாழவந்தான்" என்ற பாத்திரத்தில் யதார்ததமாய் மதுரை தமிழில் பேசி சிரிக்கவைத்து இருக்கிறார். கதையோடு ஒட்டி சில நகைச்சுவை இருப்பதால் ரசிக்கவைக்கிறது.
பக்கத்துவீட்டு "கஜாலா" விற்கு ஆன்மீகம்வயப்பட்ட ராமின் மீது காதலாம். ( அழுத்தமாக இல்லை) தேவைஇல்லாத "Commericial" ஆக்கப்பட்ட ஒரு பாடல் வேறு இவருக்கு. ( தயாரிப்பாளரின் கெடுபடியாக கூட இருக்கலாம்). கஜாலா காதலை சொல்ல, ஜீவா "சோழம் சாப்பிடறயா?" என்று குறிப்பால் கூறுவது சிறந்த காட்சி.

கொடைக்கானலில் மொத்த படப்பிடிப்பு நடந்துள்ளதால் "ராம்ஜி" யின் ஒளிப்பதிவு சிறப்பாக உள்ளது. குறிப்பாக TOP Angle லில் ராம் வில்லனை தேடும்பொழுது எடுக்கப்பட்ட பாடல் காட்சி கண்களூக்கு குளிர்ச்சி.

யுவன் மறுபடியும் சாதித்து இருக்கிறார். இதைப்போன்று திரில்லர் படங்களூக்கு பின்னணிஇசை சிறப்பாக அமைவது படத்திற்கு மேலும் வலுவைக்கொடுக்கிறது. வித்தியாசமான திரைக்கதை, திடுக்கிடும் திருப்பங்கள் மொத்ததில் "ராம்" அமீருக்கு ஒரு வெற்றிபடமே.