என் மனசாட்சியிடம் திருடியது

என் பெயர். "பிரகாஷ்". படித்தது "திருநெல்வேலி" யில்..வேலை "சிங்கார சென்னை" யில்.... தற்சமயம் "Tokyo" வில். "என்னை சுற்றி .. நம்மை சுற்றி.. நடந்தவை, நடப்பவை பற்றிய அலசல் .. இந்த வலைப்பதிவு...

Thursday, February 17, 2005

கொலுசு சத்தமும்...மல்லிகைப்பூவும்.

திருநெல்வேலி ல இருந்து மதுரை வழியில் தான் எஙக ஊரு. கிராமமும் நகரமும் கலந்து செய்த கலவை அது.. Main Road ல இருந்து குறுக்கால நடந்தா ஒரு Railway Gate வரும். Railway Gate ல இடது பக்கமா சீவிலப்பெரி, வலது பக்கம் குறிச்சிகுளம். Railway Gate ல இருந்து 10 நிமிஷம் எங்க colony. அந்த 10 நிமிஷம் station ல இருந்து வீடு வரதுக்குள்ள வேர்த்து கொட்டி இருக்கும். அதுவும் வெள்ளிக்ககிழமை உயிரே போய்டும். என்ன தான் சத்தமா சாமி பேர சொன்னாலும் எனக்கு கொலுசு போட்டு "செண்பகம்" வர சத்தம் மட்டும் எப்பவும் கேக்கற மாதிரியே இருக்கும்..

இந்த பயம் எப்ப ஆரம்பமாச்சுன்னு எனக்கு நாநே கேட்டபோது கிடைத்த பதில்.."8th la தேவதை இளம் தேவி.. உன்னை சுற்றும் ஆவி" ன்னு ஒரு பேய் பாட்டு வரும்.. அப்பன்னு தான் தோணுது. நான் பார்த்த முதல் பேய் படம் அது தான்...

கொஞ்சம் கொஞ்சமா விவரம் புரிய புரிய கிராமத்து பேய் கதையும் கூடவே தெரிஞ்சுகிட்டேன். அல்ப ஆயிசுல செததவங்க எல்லாம் "பேயா பிசாசா அலைவாங்க" ன்னு ஆழமா பதிஞ்சு போன நாட்கள் அது. "புளீய மரத்துல தான் அதிகமா பேய் இருக்கும்னு எஙக பாட்டி சொல்லுவாங்க. நம்ப முடியல.. இருந்தாலும் "இருக்குமோன்னு சந்தேகம் மட்டும் என் மனதில் முளைத்து இருந்தது. "செண்பகம் இஙக தாம்ல சுத்துது.." னு அடிக்கடி Raiwalystation Gatekeeper சொல்லுவாரு.

வீட்டுக்கு பக்கதில "பண்டாரதேவர் தென்னந்தோப்பு கிணறு. ஆழம் ஜாஸ்தி. அதுல குளிக்கறது ஒரு சுகம் தான். ஆனா பயமும் உண்டு. காரணம் "செண்பகம் தான்". 17 வயசுல தற்கொலை பண்ணி செத்து போய் இருக்கா அவ. அதுக்கு அப்பற்ம் இரண்டு மூணு கொலை ( தற்கொலை) அந்த கிணத்துல நடந்துஇருக்குன்னு மாடசாமி மாமா சொல்லுவாரு."செண்பகம்" ஆவி அங்க தான் எப்பவும் சுற்றிகிட்டு இருக்குமாம். Night சிரிப்பு சத்தம் கேக்கும்னு தோப்பு watchman சுடலை அடிக்கடி சொல்லுவாரு. "SOAP" சீக்கிரம் கரஞ்சு போகுமாம். "Shampoo" காணாம போகுமாம். சிவப்பு துண்டு நனைஞ்சு போகுமாம். தனியா குளிக்க போனா நம்ம கூட அவளும் வருவாளம். குளீச்சு முடிச்சி வெளிய வந்த அப்பறம் கூட "சலசலப்பு சத்தம்" கேட்டு கிட்டு இருக்குமாம். இது எல்லாம் கேட்ட அப்பறம் எனக்கும் பயம் இருந்தது.. ஆனால் காட்டிக்கொள்ளவில்லை.

வெள்ளிக்கிழமை ஆச்சுனா "செண்பகம்" Railway station பக்கத்துல இருக்கற "RiceMill" வீட்டுக்கு வருவா.. அவ பிறந்த வீடு அது தான். அவ செத்து போனதுக்கு அப்பற்ம் அவஙக வீட்டுல ஊர விட்டே போய்ட்டாங்க.. ரொம்ப நாள் பூட்டி கிடந்த வீடு ஒரு நாள் "பண்டாரதேவர்" நால RICEMILL ஆச்சு. ஆனா, அவரோட 23 வயசு சுபாஷ் செத்துபோன உடனே RICEMILL அ மூடிட்டாரு. இப்பவும் அது மூடி தான் இருக்கு. "குறிச்சிகுளத்து" ஆளூங்க கூட நிறைய பேரு NightShift முடிஞ்சுவரும் போது கொலுசு சத்ததை கேட்டுஇருக்காங்க. வெள்ளிக்கிழமை கண்டிப்பா அந்த Ricemill வாசல்ல மல்லிகைப்பூ இருக்குமாம். கொஞ்சம் கொஞ்சமா "செண்பகம்" எல்லார் மனசுலயும் ஆழமா பயத்த தெளிச்சுஇருந்தா..

ஒரு நாள் திடீருன்னு நல்ல இருந்த "நம்பிராஜ்" எதயோ பார்த்து பயந்து போயிருக்கானு சொல்லி அவனுக்கு "வேப்பல" அடிச்சத பார்த்தேன். அப்பறம் ஒரு நாள் Railway station Pump ல தண்ணி குடிக்கும் போது "GoodsTrain" ல அடிபட்ட ஒரு "தல இல்லா முண்டத்த" பார்த்தேன். இது எல்லாமே என்னோட "இளமைவயச" மிரள வைத்தது உண்மை தான். "செண்பகத்தை" நானும் நம்ப ஆரம்பித்து இருந்தேன்.

கிராமத்துல சில பேரு கண்ணுக்கு மட்டும் "பேய் தெரியுமாம்".. என்னோட Classmate மாரிமுத்து அம்மாவுக்கும் அப்படிதான். ஒரு வாட்டி "மாரிமுத்து"வ பேய் பிடிச்சுருச்சு.. 4 நாள் விடாம் காய்ச்சல், வாந்தி பேதி எல்லாம். Doctor கிட்ட போயும் சரியாகல. அன்னிக்கு Night அவங்கவீட்லுல மாடு, நாய் பூனை எல்லாம் கத்திக்கிட்டு இருந்திச்சாம். மாரிமுத்து அம்மா சந்தேக மட்டு வெளியவந்து பார்தது இருக்காங்க. அங்க..அங்க.. "செண்பகம்" விரிச்ச தலையோடு நின்னுக்கிட்டு இருந்துஇருக்கா.... மாரி அம்மா பயந்துபோய்.."செண்பகம் என் பையன விட்டு போயிடு.. உனக்காக சுடலமாடன் கோவில்ல நாளைக்கே கடா வெட்டி ரத்தத்தை RiceMill வாசல வைச்சுறேன்" ன்னு சொன்னாங்களாம். உடனே "செண்பகம்" பயங்கரமா சிரிச்சுகிட்டே போய்ட்டாளாம். ரத்தம் வைச்ச அடுத்த நாள் ஆச்சரியம் "மாரிமுத்து School க்கே வந்துட்டான். அவன் கிட்ட கதை கேட்டபோ "ஒரு வாரத்துக்கு முன்னாடி அவன் "மல்லிகைபூவ Ricemill வாசல்ல பார்த்து இருந்தத வீட்டுல சொல்லாம் இருந்துட்டானாம். அத சொல்லி இருந்தா மந்திரிச்சி தாயத்து கட்டி இருக்க்லாம்" ன்னு அவங்க அம்மா சொன்னாதா சொன்னான்.

அது நடந்து கிட்ட திட்ட ஒரு மாசம் ஆகி இருக்கு. காலைல Friends கூட அந்த கிணத்துல தொட்டு பிடிச்சு விளையாடும் போது எனக்கு முட்டுல அடிபட்டு "ரத்த காயம்".. அப்ப தான் மாரி சொன்னான். "எலேய்.. செண்பகம் ஒருவாட்டி ருசி பார்ததா மறுபடியும் வ்ருவா ல.." அதனால தனியா எங்கயும் போகாதனு சொன்னான்.

அதே நாள் Night ஒரு 9;30 மணி இருக்கும். அண்ணிக்கு அமாவாசை வெள்ளிக்கிழமை வேற.. Tution ல இருந்து வீட்டுக்கு வந்துகிட்டு இருந்தேன். அன்னிக்கு பார்த்து யாருமே அந்த நேரத்துல வரல.. Railway gate ல இருக்கற Tubelight வெளீச்சம் கொஞ்ச தூரம் தான் வரும். அதுக்கு அப்பறம் கும் இருட்டு தான். "சரி, ஒரு 10 நிமிஷம் Gate ல wait பண்ணுவோம், யாராவது வந்தா அவங்க பின்னாடியே போலாம். "செண்பகம் ஒருவாட்டி ருசி பார்ததா மறுபடியும் வ்ருவால.." ன்னு காலைல "மாரி" சொன்னது தேவை இல்லாம இப்ப நினைவு வந்தது. சும்மா இல்லாம என்னோட கண்ணு அந்த "RiceMill" பக்கம் போச்சு. பார்த்த உடனே செத்துட்டேன்.. ஆமாம் எப்பவும் இருட்டா இருக்கற அந்த Ricemill வீட்டுல கொஞ்சம் மங்கலா வெளிச்சம் இருந்தது. "செங்கசூளை" ல இருந்து வந்த "புகை" வேற என்னோட பயத்தை இரட்டிப்பு ஆக்கி இருந்தது. சுவத்துகோழி சத்தம் , தவளை சத்தம் எல்லாம் "Special Effects" கொடுத்து இருந்தது.

20 நிமிஷம் ஆச்சு. யாருமே வரல. "wait" பண்ணவும் பயமா இருந்துச்சு. சரி. எப்படியாவது போய்டுவோம்னு , Railway gate ல இருந்து நடக்க ஆரம்பிச்சேன் சாமி பேர சொல்லிக்கிட்டே. அடுத்த இரண்டாவது நிமிஷம். "என்ன யாரோ பின்தொடர்வது மாதிரி இருந்தது. Background ல எப்பவும் Light ஆ கேக்கற சத்தம் இப்ப தெளீவா கேட்டது பின்னாடி..சரியா Ricemill அ Croos பண்ணப்போ, அங்க இரு நாள் வரைக்கும் நான் பாக்காத "மல்லிகை.பூ என்னை பார்த்து சிரித்தது".. மரணத்தின் Calling Bell அடித்தது மாதிரி இருந்தது. அப்ப தான்.......... ஒரு கை என்னோட தோளை பிடித்தது..திரும்ப பயந்து .. "யாரு .. பின்னால?" என்றேன்.... வார்த்தை உள்வாங்கி இருந்தது. "நான் தான் ல.. செண்பகம்" என்றது அந்த குரல்.

1 Comments:

Blogger Krish R said...

பிரகாஷ்... வழக்கம் போலவே அருமை... வித்தியாசமா யோசிச்சிருக்கீங்க.... உங்களோட உரையாடல் தான் உங்கள் பலமே... எங்களுக்கெல்லாம் கொலுசு,மல்லிகைப்பூ..இப்படி எல்லாம் குடுத்து எழுதச்சொன்னா வேற வேற சமாச்சாரங்களுக்கு தான் புத்தி போகும்... நம்ம கே.பாக்யராஜ் சொல்லுற மாதிரி "ஒரு கசமுசா.." தான் தோணும்.. உங்களுக்கு ரைஸ்மில் பேயப்பத்தி தோன்றி இருக்குறது ரொம்பவே வித்தியாசமான அதே சமயம் பாராட்டுக்குரிய ஒன்று.. வாழ்த்துக்கள்.. தொடர்ந்து கலக்குங்க...

12:07 AM  

Post a Comment

<< Home