என் மனசாட்சியிடம் திருடியது

என் பெயர். "பிரகாஷ்". படித்தது "திருநெல்வேலி" யில்..வேலை "சிங்கார சென்னை" யில்.... தற்சமயம் "Tokyo" வில். "என்னை சுற்றி .. நம்மை சுற்றி.. நடந்தவை, நடப்பவை பற்றிய அலசல் .. இந்த வலைப்பதிவு...

Monday, November 14, 2005

Case By Case

வழக்குகள் பல விதம்....ஒவ்வொன்றும் புதுவிதம்...

சமீப காலத்துல தங்கர்பச்சன் மேல case போட்டது ..அவர் தமிழ்பட நடிகைகளை தப்பா பேசினதுக்காக மன்னிப்பு கேட்டு.எல்லாரு முன்னாடியும் காலுல விழுந்து..... நல்ல வேளை காலுல விழுந்தத photo எடுத்து முதல் News a போடமா இருந்தாங்களே( ஒரு வேளை வேற paper ல போட்டு இருப்பானோ ?)...

அடுத்து தங்கர கால்ல விழ வச்ச "கோயில் புகழ் குஷ்பூ" வ, புரட்டி புரட்டி எடுத்துட்டாங்க....அவ தமிழ் பெண்களயே தப்பா பேசிட்ட்டா...குஷ்புவுக்கு எதிராக அங்க case, இங்க case னு இப்ப அவ மெல ஏகபட்ட case எல்லா ஊருலயும்...அத்தியாவசிய பிரச்சன்னைகள் ஆயிரம் இருக்கு அத விட்டுட்டு இந்த மக்களயும் குத்தம் சொல்லித்தான் ஆகணும்..

குஷ்புக்கு சிபாரிசு பண்ணி பேசினதுல இப்ப "சுகாசினி" யோட "கொடும்பாவி" ய எரிச்சு இருக்காங்க... இந்த news கொஞ்ச நாள் ஓடும்...

சரி இது எல்லாம் பரவாயில்லங்க.. "விஜய்காந்த்" - இலவச கல்யாணம் பண்ணி வைச்சாருங்க எல்லா ஊருலயும்...அதுல 250 chair அ போட்டு இவரு உடைச்சுட்டாருன்னு .. அவரு மேல வழக்கு ...... எப்படி இருக்கு

"விஜய்காந்த்" chair தூக்கி போட்டு கூட உடைக்க முடியும்...ஏன்னா அவரு captain..ஆனா இந்த case அ பாருங்க.. "சிவகாசி" படத்துல வக்கீல்களை தப்பா பேசின மாதிரி வசனம் வருதாம்..அதுக்காக "விஜய்" மேலயும் "அசின்" மேலயும் case போட்டு இருக்கார் ஒரு இளம் வக்கீல் மதுரை ல இருந்து.. ( அந்த தப்பான வசனம் பேசினது இவங்க இரண்டு பேரும்தான். )..

யோ...வக்கீல்...Director சொல்லி கொடுத்தத அப்படியே பேசராங்க யா அவங்க...ஒண்ணு case a Director மேல போடு, அல்லது வசனம் எழுதினவர் மேல போடு, ..அத விட்டுட்டு. நீ எல்லாம் படிச்சு வக்கீல் ஆகி...உருப்படும்..

ஆக வழக்குகள் பல விதம். ஓவ்வொன்றும் புதுவிதம்....

பி.கு. நாட்டு நடப்ப பத்தி நானும் ஒரு பதிவு போடணும்னு ரொம்ப நாள் ஆசை...இன்னிக்கு நிறைவேறுயது..."case by case" ன்னு ஆங்கிலத்துல இந்த பதிவுக்கு பேரு வைச்சு இருக்கேன்னு "அய்யா" என் மேல case போட்டுராதீங்க?

0 Comments:

Post a Comment

<< Home