என் மனசாட்சியிடம் திருடியது

என் பெயர். "பிரகாஷ்". படித்தது "திருநெல்வேலி" யில்..வேலை "சிங்கார சென்னை" யில்.... தற்சமயம் "Tokyo" வில். "என்னை சுற்றி .. நம்மை சுற்றி.. நடந்தவை, நடப்பவை பற்றிய அலசல் .. இந்த வலைப்பதிவு...

Wednesday, September 28, 2005

கவிதையே..நீ

( கொஞ்சம் உணர்ச்சிவசப்பட்டு நானே கவிதை எழுதிட்டேன்...எப்படியாவது படிச்சுருங்க..)

1. பைபிள்-பாகம் 143

நான் உன்னை விட்டு விலகுவதும் இல்லை.
உன்னைக் கைவிடுவதும் இல்லை.
ஆனால் அன்பே..
இன்று office போய் வரவா..


2. ஏதோ..மறந்துவிட்டேனோ..

மறுபடியும் சரிபார்த்தேன்.
cellphone,
ID card,
Purse
அனைத்தும் எடுத்து இருக்க
யோசித்தேன்..
ஆ..ஆ...நினைவு வந்தது..
மறந்து போனது என் இதயத்தை..
வீட்டிலேயே..வைத்துவிட்டேன்..
போலும்.


( என்ன..தேடறீங்க..எதாயாவது எடுத்து இவன் மண்டைய உடைக்கலாம்னா....)

நல்ல சேதிதான்...

நல்ல சேதிதான்...


வெகு நாள் இடைவேளி....

காலம் ஓட ஒட சட்டென்று வயது ஆனது தெரியவந்தது. ( டேய், முடி கொட்டியது கூட தெரிய வந்ததுனு சொல்லுடா)
சரி..சரி... ஒண்ணும் இல்ல... கல்யாணம் பண்ணிக்கிட்டேன்.. அதான் ரொம்ப நாளா வலைப்ப்தியமுடியவில்லை.
இதோ மறுபடியும் தொடரப்போகிறேன்..

என்ன.... கல்யாணம் ஆனதுல ஒரே romantic ஆ மட்டும் தான் நினைக்க தோணுது.....இப்ப தான் கொஞ்சம்
கொஞ்சமா உலக விஷயங்களை படிச்சுகிட்டு வரேன்.
குஷ்பு, தங்கர்பச்சான், இந்த மாதிரி கேள்விப்பட்டுகிட்டு வரேன்.. எல்லாததயும் பத்தி எழுதணும்னு ஆசை தான்... பார்ப்போம்..

வெகு விரைவில் மீண்டும் சந்திப்போம். அது வரை உங்களிடம் இருந்து விடை பெறுவது... ப்ரகாஷ்.ப்ரகாஷ்.ப்ரகாஷ்...
( டேய், என்ன டா sound .....)
இல்லண்ணா...சும்மா.. விளம்பரம் தான்.....