என் மனசாட்சியிடம் திருடியது

என் பெயர். "பிரகாஷ்". படித்தது "திருநெல்வேலி" யில்..வேலை "சிங்கார சென்னை" யில்.... தற்சமயம் "Tokyo" வில். "என்னை சுற்றி .. நம்மை சுற்றி.. நடந்தவை, நடப்பவை பற்றிய அலசல் .. இந்த வலைப்பதிவு...

Tuesday, October 18, 2005

சுந்தர ராமசாமி - அஞ்சலி..

சுராவின் இழப்பு தமிழ் எழுத்துலகில் ஒரு பெரும் வெற்றிடத்தை விட்டு சென்று விட்டது.

சுரா என்ற சுந்தர ராமசாமி ( 30 மே, 1931 - 14 அக்டோபர், 2005) நாகர்கோவில் அருகே உள்ளே தழுவிய மகாதேவர் கோவில் என்ற கிராமத்தில் பிறந்தார்.
"ஒரு புளியமரத்தின் கதை", "ஜே.ஜே. சில குறிப்புகள்" , "விரிவும் ஆழமும் தேடி", "காற்றில் கரைந்த பேரோசை" இவை அவருடைய படைப்புகளில் சில..

" ஜே.ஜே. சில குறிப்புகள்" எத்தனை முறை படித்தாலும் மனதை விட்டு நீங்காத ஒன்று. அதை படித்து முடித்த போதும் "ஜே.ஜே. " யின் வாசம் நம்மை சுற்றிக்கொண்டே இருக்கும். சிறந்த நாவலாசிரியர் , சிறந்த விமர்சகர், சிறந்த கட்டுரையாளர் இப்படி பலப்பல பரிமாணங்களை உடையவர்... காலச்சுவடு பத்திரிகையின் ஆசிரியர்...


கடந்த சனிக்கிழமை அன்று அமெரிக்காவில் உடல்நலக்குறைவால் மருத்துவமனையில சேர்க்கப்பட்டு நுரையீரல் பாதிப்பால் மூச்சுதிணறல் ஏற்ப்பட்டு மரணம் அடைந்தார். அவருடைய உடல் நாளை விமானம் மூலம் திருவனந்தபுரம் வந்து பின்னர் நாகர்கோவிலில் அவரது சொந்த வீட்டில் பொதுகமக்கள் பார்வைக்காக வைக்கப்படும்.


தமிழ் நவீன இலக்கிய உலகில் அவர் ஆற்றிஉள்ள பங்கு காலத்திற்கும் அழியாமல் இருக்கும். அவருடைய ஆத்மா சாந்திஅடைய நாம் அனைவரும் இறைவனை வேண்டிக் கொள்வோம்...