என் மனசாட்சியிடம் திருடியது

என் பெயர். "பிரகாஷ்". படித்தது "திருநெல்வேலி" யில்..வேலை "சிங்கார சென்னை" யில்.... தற்சமயம் "Tokyo" வில். "என்னை சுற்றி .. நம்மை சுற்றி.. நடந்தவை, நடப்பவை பற்றிய அலசல் .. இந்த வலைப்பதிவு...

Wednesday, November 09, 2005

துள்ளித்திரிந்த பள்ளிக்காலம்..

ஒண்ணாம் வகுப்புல இருந்து 5 ஆம் வகுப்பு வரை நான் "C" செக்ஷன் தான். "விமலா" டீச்சர் மறக்கவே முடியாது. "பிள்ளங்களா..5 நிமிஷம் அமைதியா இருங்க" சொல்லிட்டு சாயங்காலம் தினமும் 4 மணிக்கு பேரயர் பண்ணுவாங்க. 5வது வகுப்பு வரை அவங்க தான் class டீச்சர்.. நல்லா அன்பா இருப்பாங்க..

டீச்சர்.. "Recess" ன்னு ஒரு கைய தூக்கிட்டு வெளியபோய் 5 நிமிஷம் ஓபி அடிச்சிட்டு வரதை அந்த தொன்று தொட்ட காலத்திலிருந்தே பழக்கத்தில் உள்ளதுன்னு நினைக்கிறேன். ( நிறைய தடவை headmisses கிட்ட ரொம்ப நேரம் பராக்கு பார்த்துக்கு "பின்னாடி" அடி வாங்கினதும் உண்டு.

எத்தன வருஷம் ஆனாலும் கூட படிச்சவங்க சில பேர மறக்கவே முடியாது... இப்பவும் செந்தில் ல பார்த்தா நினைவு வரும், "டேய் நீ தானே என்ன சேலேட்டால மண்டைய உடைச்சன்னு..".. சும்மா இல்ல நானும் பதிலுக்கு Tiffin box அ தூக்கி எறிஞ்சிட்டேன்.. ( பின்ன வீர பரம்பரையாச்சே ?? ) Tiffin Box ஓட விளிம்பு பட்டு சரியா கண்இமைல ஒரு கீரல் அவனுக்கு.. நல்ல வேளை கண்ணுக்கு வெளிய பட்டுச்சு..இல்லா..ஒரு கண்ணு நொள்ளயா ஆயிருக்கும்...

அப்பறம் BoysClassLeader தங்கராஜ்..வாட்ட சாட்டமா ஆள் கறுகறுன்னு இருப்பான். "எல..பேசாதல.. இல்லன்னா.board ல பேரு எழுதுருவேனு ஒரு வாட்டி சொன்னா போதும்.. அமைதியா இருக்கும் மொத்த class உம்..Girls Class Leader பானுமதி ..இவ பார்க்க நம்ம சித்தி ( நம்ம ராதிகா aunty தான் ) மாதிரியே இருப்பா.. எப்பவும் தங்கராஜும், பானுமதியும் பேசிக்கிட்டேதான் இருப்பாங்க... அவங்க பேரு மட்டும் இது வரைக்கும் Board க்கு வந்ததே இல்ல.. அப்பவே அரசியல்..

ஆ..சுவாரஸ்யமான character ஒண்ணு உண்டு. அது தான் நம்ம "அழகி" படத்துல வர மாதிரி ஒரு "தன லக்ஷ்மி" character. அவ பெரு "ஜெயந்தி"... அவங்க அப்பா தான் பள்ளிக்க்கூடத்த கட்டுனாரு...கொத்தனார் பொண்ணான்னு கேக்காதீங்க ? school Director பொண்ணுன்னு சொல்ல வந்தேன் ...ஆ..அப்ப உடனே அழகா இருப்பா, நம்ம பையனுக்கு அவ மேல ஒரு Loveன்னு கற்பனை எல்லாம் வேண்டாம்.. ஏன்னா அவ ஒரு குண்டு.... வெள வெளேர்ன்னு.... ஒரு வெள்ள பன்னிகுட்டி மாதிரி இருப்பா. அவ உஷா ( உஷாவோட அப்பா தான் செகரட்டரி ) கூட மட்டும் தான் பேசுவா..

அடுத்து சாப்பாடு... இப்பவும் அந்த பருப்போட ஒரு புளிச்ச "சத்துணவு வாசனை" வரும் பாருங்க...தூக்குது போங்க.. என் போறாத நேரம் அப்பத்தான் முட்டையும் சேத்து போட ஆரம்பிச்சாங்க school a) அந்த மணத்துல நம்ம சாப்பாடு கடைய ஆரம்பிப்போம்..இட்லி தோசைனா ஒரே குஷி தான்.( சப்பாத்தி கொண்டு வந்தது எனக்கு ஞாபகம் இல்லை )

தினசரி காலைல அம்மாகிட்ட மறக்காம கேக்கற கேள்வி இது தான். "அம்மா, இன்னிக்கு என்னமா Tiffinbox ல"ன்னு.. அம்மாவும் சலிக்காம இன்னிக்கு "சாம்பார் சாதம் வச்சு இருக்கேன்..ஒழுங்கு மரியாதையா எல்லாத்தயும் சாப்பிடு சொல்லிட்டேன்னு" ஒரு அதட்டு அதட்டுவாங்க..நம்மக்கு அழுகை அழுகையா வரும்..... அய்யயோ.. சாம்பார் பிடிக்காதுன்னு இல்ல. ( என்ன குடுத்தாலும் கொட்டிக்கறது நமக்கு அப்ப இருந்தே உண்டுங்க) . வழக்கமா சாப்பாடு நேரத்துல தான் "எரி பந்து" விளையாடுவோம்..சாம்பார் சாதம், தயிர் சாதம் னா சாப்பிட ரொம்ப நேரம் ஆகும்.. அதுக்கு தான்...

மதிய சாப்பாட்டுக்கு கடை அப்படின்னா, evening snacks ( Burger , சமோசா எல்லாம் நினைவு வந்தா நான் பருப்பு சாரி பொறுப்பு இல்லிங்க...) ஒரு தனி குஷி தான்.. அப்பா முந்தின நாள் Junction ( அதான்ங்க பக்கத்து பெரிய ஊரு. ) போய்ட்டு வந்துருந்தா போதும், கண்டிப்பா பூந்தி, லெஷ்மிவிலாஸ் அல்வா, அப்பறம் ஆந்தரா முறுக்கு கண்டிப்பா இருக்கும்......

"சுமிமாசென்.. "
"ஹை...." ...

Office la கொஞ்ச நேரம் சும்மா இருக்க விடமாட்டாங்களே..இருங்க என்னன்னு கேட்டுட்டு வந்துரேன்....

0 Comments:

Post a Comment

<< Home